இலங்கை கிரிக்கெட்டினை சீர்குலைக்கும் ஜெய் ஷா: முன்னாள் இலங்கை வீரர் குற்றச்சாட்டு!

முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கே இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு காரணம் ஜெய் ஷா எனக் கூறியுள்ளார். 
இலங்கை கிரிக்கெட்டினை சீர்குலைக்கும் ஜெய் ஷா: முன்னாள் இலங்கை வீரர் குற்றச்சாட்டு!

உலகக் கோப்பையில் இந்தியாவுடனான மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே  உத்தரவு பிறப்பித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தொடா் செயல்பாடுகளைப் பொறுத்தே சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அந்நாட்டு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் இலங்கை வீரரும் உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவருமான அர்ஜுன ரணதுங்கே இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு காரணம் ஜெய் ஷா எனக் கூறியுள்ளார்.  

மேலும் அதில், “இந்தியாவிலுள்ள ஒருவரால் இலங்கை கிரிக்கெட் சீர்குலைந்து வருகிறது. இலங்கை அணியிலுள்ள முக்கியமான அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் தொடர்பிருக்கிறது. இலங்கை அணியை ஜெய் ஷா நடத்துகிறார். அவரது அழுத்ததின் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணி அழிந்து வருகிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் என்பதால் அவருக்கு அதிகப்படியான அதிகாரம் இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com