கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் அசாம்; விமர்சிக்கும் பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகியது அந்த அணியின் வீரர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் அசாம்; விமர்சிக்கும்  பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகியது அந்த அணியின் வீரர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் நேற்று (நவம்பர் 15) அறிவித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படத் தவறியதால் பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவந்த நிலையில், நேற்று தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். 

அவரது இந்த அறிவிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் சிலர் பாபர் அசாமுக்கு ஆதரவாகப் பேசி அவருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். அணியில் உள்ள சில வீரர்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் வீரர்கள் சிலர் பாபர் அசாம் குறித்து கூறியவை பின்வருமாறு:

நசீம் ஷா: பாபர் அசாமின் கேப்டன்சியின்போது அணியில் அறிமுகமானேன். இந்த நான்கு ஆண்டுகள் அவரது தலைமையின்கீழ் சிறப்பாக அமைந்தது. நீங்கள் பாகிஸ்தான் அணியை முன்னின்று வழிநடத்தி ஒரு அணி, ஒரு கனவு என்பதை செயல்படுத்தினீர்கள். பாகிஸ்தானுக்காக பேட்டிங்கில் நீங்கள் பல சாதனைகள் படைக்க வேண்டும். 

முகமது ரிஸ்வான்: பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் பாபர் அசாமும் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக ஒரு கேப்டனாக பாபர் அசாம் அவரது சிறப்பான உழைப்பைக் கொடுத்தார். இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானுக்கு அவருடைய சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். 

இஃப்திகார் அகமது: பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்து மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com