இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்? ஆஸி.க்கு 213 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்? ஆஸி.க்கு 213 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் டெம்பா பவுமா 0 ரன்னிலும், டி காக் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய ராஸி வாண்டர் துசென் 6 ரன்களிலும், அய்டன் மார்கரம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 44 ரன்கள் எடுத்து விளையாடுகையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. டேவிட் மில்லர் மற்றும் க்ளாசன் ஓரளவுக்கு அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரித்தது. இருப்பினும், க்ளாசன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிந்தனர். தொடக்கம் முதலே ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், வருகிற நவம்பர் 19 ஆம் தேதி இந்தியாவுடன் எந்த அணி இறுதிப்போட்டியில் மோதப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com