பாட் கம்மின்ஸ் அனுபவமிக்க கேப்டனில்லை, ஆனால்...: ஷேன் வாட்சன்

தடைகளை உடைத்து ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்று தந்துள்ளதாக பாட் கம்மின்ஸை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழ்ந்து பேசியுள்ளார். 
பாட் கம்மின்ஸ் அனுபவமிக்க கேப்டனில்லை, ஆனால்...: ஷேன் வாட்சன்

தடைகளை உடைத்து ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்று தந்துள்ளதாக பாட் கம்மின்ஸை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழ்ந்து பேசியுள்ளார். 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பாட்  கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி இந்த வெற்றியை வசமாக்கியது. கடந்த ஆண்டு ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்ற பிறகு பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடரில் அவர் பெற்றுத் தந்த வெற்றி அவரை ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக மாற்றியது. தற்போது அவர் வெற்றிகரமாக ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையையும் வென்று கொடுத்துவிட்டார்.

பாராட்டு மழையில் நனைந்து வரும் பாட் கம்மின்ஸுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், தடைகளை உடைத்து ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்று தந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய மண்ணில் பாட் கம்மின்ஸுக்கு எதிராக பல விஷயங்கள் இருந்தும்  அவர் வெற்றிகரமாக ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் அனுபவம் வாய்ந்த கேப்டன் கிடையாது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவர் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் அவர் அணியை வழிநடத்திய விதம் கவனம்  பெற்றுள்ளது. இந்திய அணிக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல்லை பந்துவீசச் செய்தது அவரது மிகச் சிறந்த யுக்தி என்றே கூறலாம். பல இடங்களில் இதுபோன்ற முடிகளை கம்மின்ஸ் எடுத்து இந்தியாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார். டிராவிஸ் ஹெட் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை வெறும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com