இவர் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கியதில் மகிழ்ச்சி: ஆஸ்திரேலிய கேப்டன்

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி மைதானத்தில் உள்ள ரசிகர்களை அமைதியாக்கியது மிகுந்த திருப்தியளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இவர் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கியதில் மகிழ்ச்சி: ஆஸ்திரேலிய கேப்டன்

விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி மைதானத்தில் உள்ள ரசிகர்களை அமைதியாக்கியது மிகுந்த திருப்தியளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாதில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த 5-வது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் பாட் கம்மின்ஸ்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக, மைதானத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என பாட் கம்மின்ஸ் கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே போட்டியின்போது ரசிகர்கள் அமைதியில் உறைந்துவிட்டார்கள் என்றே கூறலாம். 

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் பேசியதாவது: நான் இதனை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும். நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அதிகமாக விரும்புகிறேன். இந்த உலகக் கோப்பை வெற்றி பெற்றதும் கூட நான் இவ்வாறு கூறுவதற்கு காரணமாக இருக்கலாம். உலகக் கோப்பை தொடர் இருதரப்பு தொடர் போன்றது கிடையாது. இது ஒரு நீண்ட தொடர். கடந்த இரண்டு மாதங்களாக நிறைய நினைவுகள் எங்களுக்கு கிடைத்தது.

அணியில் உள்ள வீரர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் பல விஷயங்களைத் தியாகம் செய்துள்ளனர். டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார். மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பார்கள் எனத் தெரியும். விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி அவர்களை அமைதியாக்கியது எனது கிரிக்கெட் பயணத்தில் அமைந்த மிக சிறப்பான தருணம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com