உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தோல்வியே காணாமல் ஆதிக்கம் செலுத்தி இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வியடைந்த அணிகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருப்பினும், சில போட்டிகளுக்குப் பிறகு அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-வது முறையாக கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளையில், உலகக் கோப்பைத் தொடரில் லீக் போட்டி முதல் அரையிறுதி வரை தோல்வியே காணாமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.
தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஓர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வியடைந்த அணிகள்
இந்தியா - 10 வெற்றிகள், இறுதிப்போட்டியில் தோல்வி (2023)
நியூசிலாந்து - 8 வெற்றிகள், இறுதிப்போட்டியில் தோல்வி (2015)
இங்கிலாந்து - 4 வெற்றிகள், இறுதிப்போட்டியில் தோல்வி (1979)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


