உலகக் கோப்பை நேரத்தில் நான் செய்த விஷயம் வீண்போகவில்லை: இஷான் கிஷன்

உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது.
உலகக் கோப்பை நேரத்தில் நான் செய்த விஷயம் வீண்போகவில்லை: இஷான் கிஷன்

உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரின்போது பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசியதும் வலைப்பயிற்சி மேற்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடரின்போது அணியில் நான் விளையாடதபோது ஒவ்வொரு பயிற்சிக்கு முன்பும் என்னை நானே சில கேள்விகள் கேட்டுக் கொண்டேன். எனக்கு தற்போது எது மிகவும் முக்கியம் என்பதையும், என்னால் தற்போது என்ன செய்ய முடியும் என்பதையும் கேட்டுக் கொண்டேன். நான் அதிக நேரம் வலைப்பயிற்சி மேற்கொண்டேன்.

ஆட்டங்கள் குறித்தும், ஆட்டத்தினை எவ்வாறு ஆழமாக எடுத்துச் செல்வது என்பது குறித்தும் பயிற்சியாளர்களிடம் அதிகம் பேசினேன். குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு திறம்பட விளையாடுவது என்பது குறித்தும் பேசினேன். 209 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை குறிவைத்து ரன்கள் எடுக்க வேண்டியதாக இருக்கும். அதனால் தன்வீர் சங்காவின் பந்துகளில் ரன்கள் அடிக்க உள்ளதாக சூர்யகுமார் யாதவிடம் கூறினேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com