இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்

உலகக்  கோப்பை இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் பந்துவீசியது போன்று ஒருவர் பந்துவீசியதை நான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்

உலகக்  கோப்பை இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் பந்துவீசியது போன்று ஒருவர் பந்துவீசியதை நான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் தொடங்கிய உலகக் கோப்பை அண்மையில் நிறைவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இந்திய அணியை 240 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இந்திய அணியை 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றியை வசமாக்கியது.

இந்த நிலையில், உலகக்  கோப்பை இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் பந்துவீசியது போன்று ஒருவர் பந்துவீசியதை நான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி பாட் கம்மின்ஸ் பந்துவீச்சின் சிறப்பான நாள் என நினைக்கிறேன். பாட் கம்மின்ஸ் பந்துவீசியதைப் போன்று வேறு யாரும் வீசி நான் பார்த்ததில்லை. அவர் சரியான நேரத்தில் சரியான பந்துகளை வீசி இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்த வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் அவரையே சென்றடைய வேண்டும் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 10 ஓவர்களை வீசிய பாட் கம்மின்ஸ் 34 ரன்களை விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டான விராட் கோலி உள்பட 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com