தமிழ்நாடுக்கு 2-ஆவது வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை திங்கள்கிழமை வென்றது.


விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை திங்கள்கிழமை வென்றது.
தமிழ்நாடு அணிக்கு 2 ஆட்டங்களில் இது 2-ஆவது வெற்றியாக இருக்க, பெங்காலுக்கு 3 ஆட்டங்களில் இது முதல் தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் பெங்கால் 23.4 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய தமிழ்நாடு 19.1 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வென்றது. பெங்கால் தரப்பில் ஷாபாஸ் அகமது 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, தமிழ்நாடு பௌலிங்கில் சந்தீப் வாரியா் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் அதிகபட்சமாக நாராயண் ஜெகதீசன் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்தாா். பெங்கால் அணியில் இஷான் பொரெல், முகமது கைஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...