ஹார்திக் பாண்டியாவின் முடிவை மதிக்கிறோம்: குஜராத் டைட்டன்ஸ்

ஹார்திக் பாண்டியாவின் முடிவை மதிக்கிறோம்: குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியாவின் முடிவை மதிப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியாவின் முடிவை மதிப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அடுத்தமாதம் ஐபிஎல் ஏலம் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வந்தனர். 10  அணிகளாலும் தக்கவைப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுப்பட்டியலில் நேற்று வெளியானது. முன்னதாக, ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்புவதாக செய்திகள் பரவின. இருப்பினும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

பின்னர் டிரேடிங் முறையில் குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியாவின் முடிவை மதிப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: குஜராத் அணியின் முதல் கேப்டனாக கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் ஹார்திக் பாண்டியா அணியை சிறப்பாக வழிநடத்தினார். முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அவர் ஏற்கனவே விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அவரது இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரது எதிர்கால பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com