எனது பூர்வீகம் இந்தியா என்பதில் பெருமை, ஆனால்.... நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திரா!

எனது பூர்வீகம் இந்தியா என்பதில் பெருமை, ஆனால்.... நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திரா!

இந்தியாவுக்கும் தனக்கும் வலிமையான பந்தம் இருப்பதாக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
Published on

இந்தியாவுக்கும் தனக்கும் வலிமையான பந்தம் இருப்பதாக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று (அக்டோபர் 5) நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், நியூசிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் தனக்கும் வலிமையான பந்தம் இருப்பதாகவும், ஆனால் நான் முழுவதுமாக ஒரு நியூசிலாந்து வீரர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நானும், டெவான் கான்வேவும் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள். நான் நியூசிலாந்தில் பிறந்தேன். எனது பெற்றோர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் முழுவதுமாக நியூசிலாந்தைச் சேர்ந்தவர். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளதை நினைத்து நான் மிகவும்  பெருமையடைகிறேன். கான்வே நியூசிலாந்தைச் சேர்ந்தவராக தன்னை மாற்றிக் கொண்டார். கடந்த 5-6  ஆண்டுகளாக அவர் நியூசிலாந்தில் உள்ளார். அவர் தற்போது முழுமையாக நியூசிலாந்தைச் சேர்ந்தவர் என நான் கூறுவேன். சொந்த நாட்டுக்காக போட்டிகளில் வெற்றி பெறுவது எப்போதும் சிறப்பானது என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்கள் எடுத்ததும், அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com