உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்!

உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் விக்கெட்டுகள் 6 வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்!

உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் விக்கெட்டுகள் 6 வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலகக் கோப்பைத் தொடரின் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தர்மசலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம்  பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. வங்கதேசத்தின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 47 ரன்கள் எடுத்தார். 

வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது மற்றும் முஸ்தபிசூர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தன்சித் ஹாசன் 5 ரன்களிலும், லிட்டன் தாஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி வங்கதேச அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றது. இருப்பினும், மெஹிதி ஹாசன் மிராஸ் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 73 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின், நஜ்முல் ஹொசைனுடன் கேப்டன் ஷகிப் ஜோடி சேர்ந்தார். அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷகிப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், வங்கதேசம் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபாசல்ஹக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் தனது வெற்றிக் கணக்கை வங்கதேசம் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com