டி20 முறையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்துடன் மோதியது. இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.
10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 50/4 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய்- ஜிதேஷ் ஷர்மா இணைந்தி 1 ரன் அவுட்டினையும் செய்துள்ளார்கள்.
.jpg)
18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நிற்காத காரணத்தினால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: வங்கதேச அணியின் சுழலில் 156 ரன்களுக்கு வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை 4வது போட்டி: இலங்கை டாஸ் வென்று பௌலிங் தேர்வு!
ஏற்கனவே மகளிர் கிர்க்கெட் அணி தங்கம் வென்றிருந்த நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
யாராவது என்னை வசைபாடினால்... கடைசி எச்சரிக்கை விடுத்த நட்டி நடராஜ்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



