இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் வலுவான வெற்றியைப் பதிவு செய்யுமா?

நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாளை (அக்டோபர் 10) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் வலுவான வெற்றியைப் பதிவு செய்யுமா?

நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாளை (அக்டோபர் 10) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தான் அணி நெதர்லாந்தின் பந்துவீச்சில் சற்று தடுமாறியது. பாகிஸ்தான் 38 ரன்களுக்கே 3  விக்கெட்டுகளை எடுத்துத் தடுமாறியது. இறுதியில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் மற்றும்  சௌத் ஷகீலின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு தேவையான அளவுக்கு ரன்கள் குவித்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி நாளை இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது. 

இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இலங்கை அணியும், வலுவான வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களம் காணவுள்ளன. பாகிஸ்தான் வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு துனித் வெல்லாலகே சவால் அளிக்கும் விதமாக செயல்படுவார் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையான போட்டி நாளை ஹதாராபாத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com