
உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலன் 140 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 82 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த இலங்கை வீரர்!
இன்றயைப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்தார். ஜோ ரூட் 63 ரன்கள் எடுத்திருக்கையில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்னதாக, இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 897 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்காக உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.