உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்!

உலகக் கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகளின் விவரங்கள் 

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் மோதி வருகின்றன. 1975 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான உலகக்கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகளின் விவரங்களைக் காணலாம். 

உலகக்கோப்பை வரலாற்றில் ஐந்தாவது மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணி ஸ்காட்லாந்து. 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31.3 ஓவருக்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

நான்காவது மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணி வங்காளதேசம். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18.5 ஓவருக்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அடுத்த இடத்தில் உள்ள அணி நமீபியா. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ஓவரில் 45 ரன்களுக்கு சுருண்டது. 

இரண்டாவது குறைந்த ரன்கள் எடுத்த அணி கனடாவாகும். 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய கனடா அணி 40.3 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் கனடா அணியே. 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியுடன் மோதிய கனடா அணி 18.4 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com