சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒரு நாள் போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 

News image
Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm

DIN

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தில் 4ஆவது சிக்ஸர் அடித்த போது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். அவர் 254 ஆட்டங்களில் பங்கேற்று இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி 308 ஆட்டங்களில் 351 சிக்ஸர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், 301 ஆட்டங்களில் 331 சிக்ஸர்கள் அடித்து அடுத்த இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.