இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக இக்ரம் அலிக்கில் 58 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்ளே, லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதனையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ஜோ ரூட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், டேவிட் மலன் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், டேவிட் மலன் 32 ரன்களில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர் (9 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (10 ரன்கள்), சாம் கரண் (10 ரன்கள்), கிறிஸ் வோக்ஸ் (9  ரன்கள்) ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்த ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்து முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தனர். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான்  தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது நபி  2 விக்கெட்டுகளையும், ஃபரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com