ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆப்கானிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: தலைமைப் பயிற்சியாளர்

உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் எந்த அணியையும் ஆப்கானிஸ்தானால் வெற்றி பெற முடியும் என  அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 3:40 pm

DIN

உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் எந்த அணியையும் ஆப்கானிஸ்தானால் வெற்றி பெற முடியும் என  அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டிலுமே தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடமும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் எந்த அணியையும் ஆப்கானிஸ்தானால் வெற்றி பெற முடியும் என  அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் விளையாடி வரும் எந்த ஒரு அணியையும் வெல்லும் திறன் ஆப்கானிஸ்தான் அணிக்கு உள்ளது. விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என நம்புகிறோம். ஆனால், அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் வெல்வதில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். முதல் போட்டி  எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. எங்கள் அணி வெற்றி பெறும் திறனுள்ள அணி. சில விஷயங்களில் நாங்கள் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புது பந்தில் விக்கெட்டினை சீக்கிரம் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.