மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

உலகக்  கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 2:48 pm

DIN

உலகக்  கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.
 
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி.

தொடக்க ஆட்டக்காரர்களாக டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பிய ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஷுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விராட் கோலி 16 ரன்களில் ஹாசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். 

Story image

ரோஹித்தைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனது.

இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஹாசன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

உலகக் கோப்பையில் 50 ஓவர் போட்டிகளில் இதுவரை 8 போட்டிகளில் (இன்றையப் போட்டியையும் சேர்த்து)  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.