இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டிகளின் விவரங்கள்

உலகக்கோப்பை போட்டிகளில் 7 முறை மோதிய இந்தியா பாகிஸ்தான் ஆட்டங்களின் விவரங்கள்
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டிகளின் விவரங்கள்

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை சந்தித்துக் கொண்ட நிலையில், அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி கண்டுள்ளது. அந்தப் போட்டிகளின் விவரங்களை இங்கு காணலாம்.  

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 49 ஓவர்களுக்கு 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 217 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

1996-ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 287 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அதனைத் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. 228 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பின்பு 2003-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 274 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது.  

2011-ஆம் ஆண்டு இந்தியாவின் மொஹாலியில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 260 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. 

2015-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 50 ஓவர்களின் முடிவில் 300 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. பின்பு ஆடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 50 ஓவர்களுக்கு 336 ரன்களை குவித்தது. ஆனால் இப்போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 302 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 போட்டிகளிலேயே அதிகபட்சமாக 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

இன்று (அக்டோபர் 14-ஆம் தேதி) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. 

தற்போதைய 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே அவற்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இருப்பினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com