சைகையால் சேதி சொன்ன விராட் கோலி: வைரலாகும் விடியோ!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சைகையால் பேசும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று அகமாதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பரபரப்பான இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி மைதானத்தில் இருந்தவாறு,  பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் சைகையால் பேசிய விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி, அனுஷ்காவிடம் சைகையால் தெரிவித்த செய்தி இதுவாக இருக்கும் என பல ஊகங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும், இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது மனைவியிடம் அன்பைப் பரிமாறும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்கிற வகையில் ரசிகர்கள் உருக்கமாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே, விராட் - அனுஷ்கா தம்பதிக்கு வாமிகா என்கிற மகள் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் தங்களின் அடுத்த குழந்தையை வரவேற்கத் தயாராகி வருவதாக சமீபத்தில் வதந்தியொன்று பரவியது. இதற்கு எந்தவிதப் பதிலும் இருவர் தரப்பிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com