இதுதான் தோல்விக்கு காரணம்: இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்

இதுதான் தோல்விக்கு காரணம்: இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி ஏற்படக் காரணம் இதுதான் என இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறியுள்ளார். 
Published on

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், லக்னெளவில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியா அணியும் திங்கள்கிழமை மோதின.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை கேப்டன் தசுன் ஷானகா காயம் காரணமாக வெளியேற குசால் மெண்டிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றார். இந்தப் போட்டியின் தோல்வி குறித்து குசால் மெண்டிஸ் கூறியதாவது: 

நிசாங்கா, பெராரே நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்களது விக்கெட்டுக்குப் பிறகு நாங்கள் தடுமாற ஆரம்பித்தோம். 290 அல்லது 300 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் குறைவான ரன்களே எடுத்தோம். ஸ்டிரைக்கினை ரொடேட் செய்ய முடியவில்லை. கடைசி 2 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்களது பேட்டிங் அணி மீது நம்பிக்கையுள்ளது. மதுஷனகா சிறப்பாக பந்து வீசினார். இன்னும் கொஞ்சம் நாங்கள் சிறப்பாக ஃபீல்ட் செய்திருக்கலாம். பதிரானா விரைவில் நலம் பெறுவாரென நம்புகிறேன் எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com