பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கு வைரஸ் காய்ச்சல்!
பாகிஸ்தான் வீரர்கள் பலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலேயே உள்ளனர்.
பாகிஸ்தான் தங்களது அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி பெங்களூவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பெங்களூருக்குச் சென்றனர். பெங்களூரு சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் பலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக வானிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தீடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதற்கு வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: கடந்த சில நாள்களாக சில வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில் பலர் தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டனர். குணமடைந்து வரும் சிலர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.