சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 4-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உலகக் கோப்பையின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியின்போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 4-வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த விராட் கோலி இலங்கையின் ஜெயவர்த்தனேவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 34357 ரன்கள்
குமார் சங்ககாரா - 28016 ரன்கள்
ரிக்கி பாண்டிங் - 27483 ரன்கள்
விராட் கோலி - 26026 ரன்கள் 
மஹேலா ஜெயவர்த்தனே - 25957 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com