
உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும். கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகள்
தோல்வியடைந்த அணி | எதிரணி | ரன்கள் வித்தியாசம் | ஆண்டு |
மே.இ.தீவுகள் | தென்னாப்பிரிக்கா | 257 ரன்கள் | 2015 |
இங்கிலாந்து | தென்னாப்பிரிக்கா | 229 ரன்கள் | 2023 |
நியூசிலாந்து | ஆஸ்திரேலியா | 215 ரன்கள் | 2007 |
வங்கதேசம் | தென்னாப்பிரிக்கா | 206 ரன்கள் | 2011 |
அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அடைந்த தோல்விகள்
எதிரணி | ரன்கள் வித்தியாசம் | ஆண்டு |
தென்னாப்பிரிக்கா | 229 ரன்கள் | 2023 |
ஆஸ்திரேலியா | 221 ரன்கள் | 2022 |
இலங்கை | 219 ரன்கள் | 2018 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.