இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 399  ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாசன் 109 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 85 ரன்களும், மார்கோ ஜேன்சன் 75 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களிலும், டேவிட் மலன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட் (2 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (5 ரன்கள்), ஹாரி ப்ரூக் (17 ரன்கள்), ஜோஸ் பட்லர் (15 ரன்கள்), டேவிட் வில்லே (12 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்க் வுட் 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்  அடங்கும்.

இறுதியில்  22 ஓவர்களில் இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெரால்டு கோட்டீஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும். இன்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து தனது 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com