24 கோடி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளோடு ஷதாப் கான் விளையாடுகிறாரா? பாகிஸ்தான் முன்னாள் வீரர் காட்டம்!

ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஃபீல்டிங்கை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கானை பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
24 கோடி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளோடு ஷதாப் கான் விளையாடுகிறாரா? பாகிஸ்தான் முன்னாள் வீரர் காட்டம்!

ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஃபீல்டிங்கை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கானை பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்வி அந்த அணியின் தொடர்ச்சியான 4-வது தோல்வியாகும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் இந்த தொடர்ச்சியான தோல்விகளை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஃபீல்டிங்கை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கானை பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷதாப் கானுக்கு பயப்படும்படியான காயம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒன்றிரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டபோது அவர் கேமரா முன்பு அணியின் வெற்றிக்காக கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். அதற்கு அர்த்தம் என்ன? 24 கோடி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளோடு நீங்கள்  விளையாடுகிறீர்கள் என்றே அர்த்தம். இது ஒன்றும் வேடிக்கையல்ல. ஃபீல்டிங்கின்போது ஷதாப் கானுக்கு அடிபட்டது. ஆனால், அவர் சிறிது நேரத்தில் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வந்தார். அதன்பின் அவருக்குப் பதிலாக உசாமா மிர் ஃபீல்டிங்குக்கு வந்தார். போட்டியின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு செய்ததாக நான் நினைக்கிறேன். கைகள் உடைந்தும் அணியின் நலனுக்காக  விளையாடிய வீரர்களை எனக்குத் தெரியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com