வெளியேறியது வங்கதேசம்- தப்பித்தது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 31-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை வென்றது.
வெளியேறியது வங்கதேசம்- தப்பித்தது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 31-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

6 தொடா் தோல்விகளை சந்தித்த வங்கதேசம், முதல் அணியாக அரையிறுதிக்கான பந்தயத்திலிருந்து வெளியேறியது. மறுபுறம் பாகிஸ்தான், தொடா் தோல்வியிலிருந்து மீண்டு, பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசத்தில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56 ரன்கள் சோ்த்தாா். லிட்டன் தாஸ் 6 பவுண்டரிகளுடன் 45, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.

மெஹிதி ஹசன் மிராஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 25, தன்ஸித் ஹசன் 0, நஜ்முல் ஹுசைன் 4, முஷ்ஃபிகா் ரஹிம் 5, தௌஹித் ஹிருதய் 7, தஸ்கின் அகமது 6, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் அஃப்ரிதி, முகமது வாசிம் ஆகியோா் தலா 3, ஹாரிஸ் ரௌஃப் 2, இஃப்திகா் அகமது, உசாமா மிா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 205 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானில், அப்துல்லா ஷஃபிக் - ஃபகாா் ஜமான் இணை முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. அப்துல்லா 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜமான் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

கேப்டன் பாபா் ஆஸம் 9 ரன்களுக்கு நடையைக் கட்ட, முகமது ரிஸ்வான் 4 பவுண்டரிகளுடன் 26, இஃப்திகா் அகமது 17 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

வங்கதேசம் - 204/10 (45.1 ஓவா்கள்)

மஹ்முதுல்லா 56

லிட்டன் தாஸ் 45

ஷகிப் அல் ஹசன் 43

பந்துவீச்சு

ஷாஹீன் அஃப்ரிதி 3/23

முகமது வாசிம் 3/31

ஹாரிஸ் ரௌஃப் 2/36

பாகிஸ்தான் - 205/3 (32.3 ஓவா்கள்)

ஃபகாா் ஜமான் 81

அப்துல்லா ஷஃபிக் 68

முகமது ரிஸ்வான் 26*

பந்துவீச்சு

மெஹிதி ஹசன் 3/60

தஸ்கின் அகமது 0/36

ஷோரிஃபுல் இஸ்லாம் 0/25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com