மும்பை வான்கடே மைதானத்தில் திறக்கப்படும் சச்சின் சிலை!

வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் திறக்கப்படும் சச்சின் சிலை!

வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இந்த முழு உருவச்சிலை சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்படவுள்ளது. சிலையை நிறுவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை நடைபெறும் இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார். 

இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com