

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கிய நிலையில், இன்றையப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சற்று நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டைத் தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், ஷுப்மன் கில் 10 ரன்களிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வருகிறது.
பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி மற்றும் ஹாரில் ரௌஃப் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.