ஆசிய கோப்பை: இந்தியா - நேபாளம் ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு?

நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் அடுத்த ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஆசிய கோப்பை: இந்தியா - நேபாளம் ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு?
Updated on
1 min read

நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் அடுத்த ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாகிஸ்தான்-இந்தியா இடையிலான ஆட்டத்தை மழை முடித்து வைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா தடுமாறிய நிலையில், இஷான் கிஷண்-ஹாா்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தால் மீண்டு 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கையின் கண்டி நகரில் சனிக்கிழமை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தாா்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சு காரணமாக 48.5 ஓவா்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பௌலிங் செய்த ஷாஹின் ஷா அப்ரிடி 4/35 விக்கெட்டுகளையும், நஸீம் ஷா 3/36, ஹாரிஸ் ரவுஃப் 3/58 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 267 ரன்களை நிா்ணயித்தது இந்தியா. இன்னிங்ஸ் பிரேக்குக்கு பின் ஆட்டம் தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மழை பெய்ததால், தாமதம் ஏற்பட்டது. 

இதனால் மைதான ஊழியா்கள் கவா்களை கொண்டு பிட்சை மூடினா். இரவு 9 மணிக்கு நடுவா்கள் சென்று மைதானத்தை சோதனை செய்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவா்கள் அறிவித்தனா். இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி பகிா்ந்து அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் வென்ற நிலையில், சூப்பா் ஃபோா் பிரிவுக்கு தகுதி பெற்று விட்டது. ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா ஒரு புள்ளியுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது. 

இந்த நிலையில் நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் அடுத்த ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்லகலேவில் நேற்று முதல் மழை நிற்கவில்லை, திங்கட்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூகுள் வெதர் படி, இந்தியா மற்றும் நேபாளம் போட்டி நடைபெறும் நாளில் கண்டி பல்லேகலேயில் இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியா - நேபாளம் ஆட்டம் நாளை முழுமையாக நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com