இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுகிறாரா மேக்ஸ்வெல்?

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுகிறாரா மேக்ஸ்வெல்?

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20  தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகினார். அதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக பேசிய கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக விளையாடியாக வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் எனக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. உலகக் கோப்பை  தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், அவசர அவசரமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக வேண்டிய சூழல் இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com