8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய வீரர்!

​8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய வீரர்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இரண்டு ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஸ்டார்க் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் விளையாடியிருந்தார்.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வில்லோ டால்க் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிட்செல் ஸ்டார் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை எதிர்நோக்கியிருக்கிறேன். 20 ஓவர் உலகக் கோப்பை வரவுள்ளது. அதனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி விட்டு உலகக் கோப்பையில் விளையாடுவது சிறந்த வாய்ப்பாக இருக்கும். அதனால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com