இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க இவர் சரியாக இருப்பார்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க  இஷான் கிஷன் சிறந்த தெரிவாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க  இஷான் கிஷன் சிறந்த தெரிவாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் ஹார்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து  82 ரன்கள் எடுத்தது இந்தியாவின் ஸ்கோர் உயர காரணமாக அமைந்தது. 

இந்த நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க  இஷான் கிஷன் சிறந்த தெரிவாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஜியோ சினிமாவுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என்பதை  எப்போதும் கூறுவேன். ஏனென்றால் அவர் வலிமையான குணம் கொண்டவர். அணியின் தேவைக்கேற்றவாறு சிறப்பான சூழலை உருவாக்குபவர். நான் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடியபோது ஆரோன் ஃபின்ச்சிடம் கூறியிருக்கிறேன். குஜராத் லயன்ஸ் அணியில் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவைன் ஸ்மித் தொடக்க வீரர்களாக களமிறங்கவில்லையென்றால் இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். நான் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறேன். மற்ற வீரர்கள் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 4-5 சிக்ஸர்கள் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை இஷான் வெளிப்படுத்தியிருப்பார். அணியின் தேவையை உணர்ந்து  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் அவர். ரிஷப் பந்த்தினை போன்று அணியுடன் எப்போதும் இணக்கமாக இருப்பவர். இஷான் கிஷனின் வளர்ச்சியை கவனித்துக் கொள்ளுமாறு தோனி என்னிடம் கூறியதுண்டு. இஷானின் விக்கெட் கீப்பிங்கின் முன்னேற்றம் குறித்தும் தோனி கவனித்துக் கொள்ள கூறினார்  என்றார்.

இந்திய அணியில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com