ஐபிஎல் போட்டிகளால் சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட்: முத்தையா முரளிதரன்

ஐபிஎல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளால் சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட்: முத்தையா முரளிதரன்

ஐபிஎல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகள் வீரர்கள் முன்னேறுவதற்கு வழிவகை செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் வீரர்களுக்கு அதிக அளவிலான பணத்தையும், வாய்ப்புகளையும் அளித்துள்ளது. இந்தியாவுக்கு திறமையான வீரர்களை ஐபிஎல் அளித்துள்ளது. அதிக அளவிலான திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர்களைப் போன்று தற்போது டிஎன்பிஎல் தொடர் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். ஐபில் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் சிறப்பாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com