இலங்கை - பாகிஸ்தான் போட்டி: மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் வீசுவது மழை காரணமாக தாமதம் ஆகியுள்ளது.
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்று (செப்டம்பர் 14) பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது. கொழும்புவில் மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவது தாமதமாகியுள்ளது.
இதையும் படிக்க: கடும் உடற்பயிற்சியில் ராஷ்மிகா!
சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால் இன்றையப் போட்டியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானப் போட்டியாகும்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.