8-வது முறையாக ஆசியக் கோப்பை சாம்பியனான இந்தியா: சாதனைத் துளிகள்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 10  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
8-வது முறையாக ஆசியக் கோப்பை சாம்பியனான இந்தியா: சாதனைத் துளிகள்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 10  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் போட்டிக்கு பிறகு ஒருநாள் தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை பின்வருமாறு காணலாம்.

குறைந்த ஓவர்களில் ஆட்டமிழந்த அணிகளின் விவரம்

ஜிம்பாப்வே, 2017 (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) (13.5 ஓவர்களில்) 
இலங்கை, 2023 (இந்தியாவுக்கு எதிராக) (15.2 ஓவர்களில்)
ஜிம்பாப்வே, 2001 (இலங்கைக்கு எதிராக) (15.4 ஓவர்களில்)
இலங்கை, 2002 (பாகிஸ்தானுக்கு எதிராக) (16.5 ஓவர்களில்)

10 விக்கெட்டுகளையும் வேகப்  பந்துவீச்சாளர்கள் எடுத்த விவரம் (ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில்)

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள், 2023 (இந்தியாவுக்கு எதிராக)
இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள், 2023 (இலங்கைக்கு எதிராக)

ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோர்கள்

43  ரன்கள், 2012 - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக
50 ரன்கள், 2023 - இந்தியாவுக்கு எதிராக
55 ரன்கள், 1986 - மே.இ.தீவுகளுக்கு எதிராக
67 ரன்கள், 2014 - இங்கிலாந்துக்கு எதிராக 
73 ரன்கள், 2023 - இந்தியாவுக்கு எதிராக 

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்களின் சிறந்த பந்துவீச்சு

ஸ்டுவர்ட் பின்னி - 6 விக்கெட்டுகள் ( 4 ரன்கள்), 2014 - வங்கதேசத்துக்கு எதிராக
அனில் கும்ப்ளே - 6 விக்கெட்டுகள் (12 ரன்கள்), 1993 - மே.இ.தீவுகளுக்கு எதிராக
ஜஸ்பிரித் பும்ரா - 6 விக்கெட்டுகள் (19 ரன்கள்), 2022 - இங்கிலாந்துக்கு எதிராக 
முகமது சிராஜ் - 6 விக்கெட்டுகள் (21 ரன்கள்), 2023 - இலங்கைக்கு எதிராக

ஒருநாள் போட்டிகளில் இறுதிப்போட்டியில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள்

இலங்கை (2023) - 50 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக)
இந்தியா (2000) - 54 ரன்கள் (இலங்கைக்கு எதிராக)
இலங்கை (2002) - 78 ரன்கள் (பாகிஸ்தானுக்கு எதிராக)
ஓமன் (2019) - 81 ரன்கள் (நமீபியாவுக்கு எதிராக)

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணிகள் 

இலங்கை (2023) - 50 ரன்கள்
வங்கதேசம் (2014) - 58  ரன்கள் 
ஜிம்பாப்வே (2005) - 65 ரன்கள்
இலங்கை (2023) - 73 ரன்கள்

குறுகிய ஒருநாள் போட்டி (பந்துகள் வீசப்பட்டதன் அடிப்படையில்)

நேபாளம்-அமெரிக்கா (2020) - 104 பந்துகள் 
இலங்கை - ஜிம்பாப்வே (2001) - 120 பந்துகள்
இந்தியா - இலங்கை (2023) - 129 பந்துகள்
இலங்கை - கனடா (2003) - 140 பந்துகள்

ஒருநாள் இறுதிப்போட்டியில் மிகப் பெரிய வெற்றிகள் (பந்துகள் மீதமிருக்கும் அடிப்படையில்)

இந்தியா - இலங்கை (2023) - 263 பந்துகள் மீதம் 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (2003) - 226 பந்துகள் மீதம்
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (1999) - 179  பந்துகள் மீதம்

ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெற்ற மிகப் பெரிய வெற்றிகள் (பந்துகள் மீதமிருக்கும் அடிப்படையில்)

இந்தியா - இலங்கை (2023) - 263 பந்துகள் மீதம்
இந்தியா - கென்யா (2001) - 231 பந்துகள் மீதம்
இந்தியா - மே.இ.தீவுகள் (2018) - 211 பந்துகள் மீதம்
இந்தியா - இங்கிலாந்து (2022) - 188 பந்துகள் மீதம்

ஒருநாள் இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்

இந்தியா - ஜிம்பாப்வே (1998) - இந்தியா வெற்றி - 197 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (2003) - ஆஸ்திரேலியா வெற்றி - 118  ரன்கள் இலக்கு
இந்தியா - இலங்கை (2023) - இந்தியா வெற்றி - 51 ரன்கள் இலக்கு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com