உலகக் கோப்பை தொடரிலிருந்து டிம் செளதி விலகல்?

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிம் செளதி
டிம் செளதி

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன. அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.

இந்த தொடருக்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்தின் டிம் செளதிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, டிம் செளதியின் வலது கட்டை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் உலகக் கோப்பை அணியில் டிம் செளதி இடம்பெறுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள டேரில் மிட்செலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com