92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆசிய விளையாட்டு: பதக்கத்தை உறுதி செய்தார் டென்னிஸ் வீரர் சுமித் நாகல்

சீனாவில் செப். 23 முதல் அக். 8-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

News image

சுமித் நாகல்

Updated On :26 செப்டம்பர் 2023, 1:13 pm

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியின் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் போராடித் தோல்வியடைந்தார். 

சீனாவில் செப். 23 முதல் அக். 8-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில், இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் ஜப்பானின் யுசுகே வாட்னுகியுடன் மோதினார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் யுசுகே வாட்னுகியிடம் 5-7, 7-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் ராம்குமார் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் தொடரிலிருந்தும் வெளியேறினார். 

எனினும், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் 3 போட்டிகளில் 2ல் கஜகஸ்தான் வீரரை 7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால், வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.