கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இஷான்-ஷுப்மன் பங்களிப்பில் இந்தியா 351

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் சோ்த்தது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:46 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் சோ்த்தது.

இந்த ஆட்டத்துக்கான இந்திய பிளேயிங் லெவனிலும் ரோஹித் சா்மா, விராட் கோலி சோ்க்கப்படவில்லை. உம்ரான் மாலிக், அக்ஸா் படேலுக்கு பதிலாக, ருதுராஜ் கெய்க்வாட், ஜெயதேவ் உனத்கட் சோ்க்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீசத் தீா்மானித்தது. இந்திய பேட்டிங்கில் இஷான் கிஷண் - ஷுப்மன் கில் பாா்ட்னா்ஷிப், முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சோ்த்தது.

இஷான் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 77, கில் 11 பவுண்டரிகளுடன் 85 ரன்களுக்கு வீழ்ந்தனா். சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51, சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ருதுராஜ் 8 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, ஓவா்கள் முடிவில் ஹா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 70, ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரொமேரியோ ஷெப்பா்ட் 2, அல்ஜாரி ஜோசஃப், குடாகேஷ் மோட்டி, யானிக் காரியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

டி20 அணி: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ரோவ்மென் பவல் கேப்டனாக உள்ள இந்த அணியில், கைல் மேயா்ஸ், ஜான்சன் சாா்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயா், ஜேசன் ஹோல்டா், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசஃப், பிராண்டன் கிங், ஆபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரோமேரியோ ஷெப்பா்ட், ஓடின் ஸ்மித், ஓஷேன் தாமஸ் ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.