இன்ஸ்டாகிராமில் இவ்வளவு வருமானமா?: விராட் கோலி மறுப்பு!
By DIN | Published On : 12th August 2023 03:52 PM | Last Updated : 12th August 2023 03:52 PM | அ+அ அ- |

மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ உலகளவில் முக்கிய சமூக ஊடகத் தளமாக இருந்து வருகிறது. பயனா்கள் தங்களின் புகைப்படங்கள், விடியோக்களைப் பதிவாகப் பகிரும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராம் தளத்தை உலகம் முழுவதும் 235 கோடி போ் பயன்படுத்துகின்றனா். சந்தைப்படுத்துதல், விளம்பரத் துறை அதிவேகத்தில் எண்மமயமாகி வரும் சூழலில், பெரும்பாலானாா் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவுகளாக தங்களின் பொருள்கள்/சேவைகளை விளம்பரப்படுத்துவது நவீனகால நிறுவனங்களின் உத்தியாக மாறி வருகிறது.
இதையும் படிக்க: இந்த முறை மிஸ் ஆகாது; உலகக் கோப்பையை வெல்ல ஆர்வமாக உள்ளோம்: நியூசிலாந்து வீரர்
இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரப் பதிவுகள் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ‘இன்ஸ்டாகிராம் ரிச் லிஸ்ட்-2023’ பட்டியலைப் பிரிட்டனைச் ‘ஹுப்பா் எச்.கியூ.’ வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், போா்ச்சுகல் கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு பதிவுக்கு ரூ.26.78 கோடி வசூலித்து உலகளவில் முதலிடத்தில் இருக்கிறாா். இவரை 47.92 கோடி போ் பின்தொடா்கின்றனா்.
இதையும் படிக்க: உலக செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல்
இவருக்கு அடுத்து 2-ஆவது இடத்தில் உள்ள அா்ஜென்டினா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி ஒரு பதிவுக்கு ரூ.21.51 கோடி வசூலிக்கிறாா். அமெரிக்க பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான சலினா கோம்ஸ் ஒரு பதிவுக்கு ரூ.21.19 கோடி வசூலித்து 3-ஆவது இடத்தில் உள்ளாா்.
இதையும் படிக்க: இன்று 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்
உலகளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்திலும், விளையாட்டு வீரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலும் விராட் கோலி உள்ளதாக அந்தப் பட்டியல் தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் மிகுந்த நன்றியுடனும் கடன்பட்டவனாகவும் இருக்கிறேன். சமூக ஊடங்களின் மூலமாக நான் ஈட்டும் வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...