சிறந்த ஐவர்களில் இரண்டு பேட்டர்கள் ஆகச்சிறந்தவர்கள்: கிரேக் சாப்பல்
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஃபேபுலஸ் ஃபோர் (மிகச் சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. இதில் இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது இந்த அடைமொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஐந்தாவதாக இணைந்துள்ளார். அதனால் ஃபேபுலஸ் ஃபைவ் என அழைக்கப்படுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை வரும் அக்.5ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் நேர்காணல் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம்?: வைரலாகும் புதிய தோற்றம்!
அதில்,“இந்த ஐவர்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை எடுத்துள்ளார்கள். இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை வரும்நிலையில் இந்த ஐவர்களுக்குமே ரன்கள் குவிக்க அதிகம் வாய்ப்புள்ளது. ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், டி20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக இருப்பது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே. இந்த இரண்டு பேட்டர்கள் தங்களது முத்திரையை இந்த உலகக் கோப்பையில் பதிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.
விராட் கோலி டெஸ்டில் 8676 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 12898 ரன்களும் எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 9320 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 4939 ரன்களும் எடுத்துள்ளார்.
ஸ்மித்தின் ஒருநாள் சராசரி 44.49 மற்றும் டெஸ்டில் 58.61 என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் ஒருநாள் சராசரி 57.32 மற்றும் டெஸ்டின் சராசரி 49.29 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.