இது மிகப் பெரிய சாதனை; ஐக்கிய அரபு அமீரகத்தை பாராட்டிய அஸ்வின்!
By DIN | Published On : 20th August 2023 04:03 PM | Last Updated : 20th August 2023 04:12 PM | அ+அ அ- |

நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வெற்றி உந்துதலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இதையும் படிக்க: லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது: ரஷியா
இந்த நிலையில், நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் (எக்ஸ்) பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது மிகப் பெரிய சாதனை. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மற்ற போட்டிகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் காட்டியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...