ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 12:03 pm

DIN

குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்திய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது இந்தியா. இந்திய அணி தோல்வியடைந்தபோதிலும், ரோஹித் சர்மா தலைமையில் அணி தங்களது அபார திறனை வெளிப்படுத்தியதாக பலரும் பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு  இந்த ஓய்வு என்பது மிகவும் அவசியமானது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி  டி20 போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க அவர்களுக்கு இந்த ஓய்வு உதவியாக இருக்கும். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா தயாரான பிறகு, அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும். ஏனெனில், அவர் உலகக் கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரோஹித் மற்றும் விராட் இருவரும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள். குறைந்தது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரையிலாவது ரோஹித் சர்மா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா  மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.