நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டி20 உலகக் கோப்பைக்கான மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக மாறி வரும் ரவி பிஷ்னோய்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ரவி பிஷ்னோய் இடம்பெற்றுள்ளதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியின்  மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அவர் உருவாகி வருகிறார்.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 8:46 pm IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ரவி பிஷ்னோய் இடம்பெற்றுள்ளதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியின்  மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அவர் உருவாகி வருகிறார்.

டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 6 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்  மேற்கொள்ளும் இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. டி20  தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலின் பெயர் இடம்பெறவில்லை. அண்மைக் காலங்களில் சிறப்பாக பந்துவீசி வரும்  ரவி பிஷ்னோய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்பட்டார். 5 போட்டிகளில் விளையாடி  9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிஷ்னோய் தொடர் நாயகனாகன் விருதினையும் வென்றார். இந்த ஆண்டு சஹாலைக் காட்டிலும் அதிக டி20 போட்டிகளில் ரவி பிஷ்னோய் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு சஹால் 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிஷ்னோய் 11 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைக்கு  இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அணியில் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக இடம்பெறுவதற்கு ரவி பிஷ்னோய் தயாராகி வருகிறார். அணியில் ஏற்கனவே ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருக்கும் நிலையில், தற்போது ரவி பிஷ்னோய் இந்திய அணியின் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளருக்கான இடத்துக்கு சரியான தெரிவாக இருப்பார் எனப் பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.