2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணிக்கு திரும்பிய ரஸ்ஸல்! 

பிரபல மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இங்கிலாந்து அணி  மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என மேற்கிந்திய தீவுகள் அணி வென்று அசத்தியுள்ளது. அடுத்து டி20 தொடர் டிச.13ஆம் தேதி துவங்க உள்ளது. 

மே.இ. தீவுகள் அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடிக்கு பெயர் போனவர். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மிகவும் புகழ்பெற்றவர். 

67 டி20 போட்டிகளில் 156 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி 741 ரன்களும் 112 ஐபிஎல் போட்டிகளில் 174 ஸ்டிரைக் ரேட்டுடனும் விளையாடி 2262 ரன்களும் குவித்துள்ளார்.

“மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அவர் இந்தப் பக்கமே திரும்பவில்லை. மற்ற நாடுகளின் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். நாட்டுக்காக விளையாடுமாறு அவர்களிடம் கெஞ்ச முடியாது” என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சிம்மன்ஸ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முதன்முறையாக மேத்யூ ஃபோர்டு டி20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

15 பேர் கொண்ட மே.இ.தீவுகள் அணி: 

ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணைக் கேப்டன்), மேத்யூ ஃபோர்டு, ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், அகெய்ல் ஹொஸைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோதி, நிகோல்ஷ் பூரண், கைல் மேயர்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரூதர்போர்ட், ரோமரியோ ஷெஃபார்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com