தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் சாதித்த மேற்கிந்திய தீவுகள் அணி! 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரினை வென்று சாதனை படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. 

News image
Updated On :10 டிசம்பர் 2023, 6:24 am

DIN

இங்கிலாந்து அணி  மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என வென்று அசத்தியுள்ளது. 

முதல் போட்டியில் மே.இ.தீ. அணி வென்றது. 2வது போட்டி இங்கிலாந்து வென்றது. 3வது போட்டியில் முதலில் ஆடிய 40 ஓவர் முடிவில் இங்கிலாந்து 206/9 ரன்கள் எடுத்தது. மழைக் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதிகபட்சமாக  பென் டக்கெட் 71, லிவிங்ஸ்டன் 45 ரன்களும் எடுத்தனர். 

மே.இ.தீ. அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு, அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளையும், ரோமியோ ஷெஃபார்டு 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அடுத்து ஆடிய மே.இ.தீ. அணி 31.4 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அலிக் அதான்ஸா 45, கீசி கார்டி 50 ரன்களும் இறுதியில் ரோமியோ ஷெஃபார்டு 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 

மேத்யூ ஃபோர்டு ஆட்ட நாயகன் விருது பெற சாய் ஹோப் தொடர் நாயகன் விருது பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர் மே.இ.தீ. அணியினர். 

சாம்பியன் அணியான மே.இ.தீ. அணி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை    போட்டியில் தேர்வாகாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு புத்துணர்வை தருவதாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.