பேஸ்பால் பேட்டிங் அணுகுமுறையை இந்தியா ஊதித் தள்ளிவிடும்: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன்பு இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறை தவிடுபொடியாகுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்  தெரிவித்துள்ளார். 
பேஸ்பால் பேட்டிங் அணுகுமுறையை இந்தியா ஊதித் தள்ளிவிடும்: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன்பு இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறை தவிடுபொடியாகுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்  தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில்  தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன்பு இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறை தவிடுபொடியாகலாமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகில் விளையாடுவதற்கு மிகவும் கடுமையான இடம் இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் நாதன் லயன் அணியில் முழு உடல்தகுதியுடன் இருந்தவரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பேஸ்பால் அணுகுமுறைக்கு எதிராக நாதன் லயன் சிறப்பாக பந்துவீசினார். நாதன் லயனின் பந்துவீச்சில் மோசமான ஷாட்களை விளையாடி இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்திய அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சு உள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஸர் படேலின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் பேஸ்பால் பேட்டிங் அணுகுமுறை ஊதித் தள்ளப்படலாம். இந்தியாவை வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com