பிறந்தநாளில் அசத்திய குல்தீப் யாதவ்!

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமானதாக இருப்பதாக இந்திய அணியின்  குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளில் அசத்திய குல்தீப் யாதவ்!

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமானதாக இருப்பதாக இந்திய அணியின்  குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவருக்கு முன்னதாக புவனேஷ்குமார் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்த நிலையில்,  தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமானதாக இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. நான் 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அணியின் வெற்றிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு விளையாடுவதால் எனது பந்துவீச்சு குறித்து கவனமாக இருந்தேன். இந்த நாள் எனக்கு மிகச் சரியான நாளாக அமைந்துள்ளது. நன்றாக பந்துவீச முடிந்தது. ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கும் பொருத்தமானதாகவே இருந்தது என்றார். 

நேற்று குல்தீப் யாதவின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com